Wednesday, March 22, 2017

அம்பாலிகை - விளையாட்டுச் சோலை

 
 
மதிப்பிரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ,


அதிகப்ரசங்கி என எண்ணவேண்டாம்.

உங்கள் முதற்கனல் நாவலை முடித்து மழைப்பாடலைப்  படித்த்திக்கொண்டிருக்கிறேன். முதற்கனலில் என்னை மிகவும் disturb செய்தபகுதி அம்பிகையின் மணிமஞ்ச  பகுதி - முதற்கனல் 24 . 

விசித்திரவீரியனைப்பற்றி இருந்த ஒரு பிம்பத்தை அப்படியே 180 டிகிரி  பிருத்திப்போட்டுவிட்ட பகுதி அது. அம்பிகையை  மட்டுமல்ல , என்னையும்தான் அது ஏதோ செய்துவிட்டது . மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்துவிட்ட்டேன். என்ன magic என்று புலப்படவில்லை.

அம்பிகைக்கு மட்டும் கிடைத்த அந்த தருணம் அம்பாலிகைக்கு கிடைக்கவில்லையே என்று சிலநாட்களாக ஏங்கி தவித்துக்கொண்டிருந்தேன். என்ன செய்வது அடுத்தநாளே விசித்ரவீர்யன் உயிர் துறந்து விடுகிறான்.

சரி நானே அதைத்தந்துவிடலாம் என்று துணிந்து இறங்கிப்பார்த்தேன். உங்கள் போல முடியவவே முடியாது. உண்மையில் உங்கள் தருணங்களையே எடுத்து எங்கனவாய் ஆக்கிப்பார்த்தேன் - உங்கள் நாவலின் ஒரு தருணத்தையே எடுத்து இடையில் இதை சொருகிப்பார்க்கிறேன். உங்கள் கதைமாந்தர் சித்தரிப்பையே முடிந்தவரை copy செய்ய முயன்றிருக்கிறேன்.

விசித்ரவீர்யனைப்பற்றி அம்பாலிகைக்கு உணர்த்தவேண்டும் என்றஎண்ணத்தில் தொடங்கினேன் . அனால் அது என்னால் முடியவில்லை.

எழுதத்தொடங்கிய நோக்கம் மாறி அம்பாலிகைகைப்பற்றியே ஒருவாரு நானே புரிந்தவிதத்தில் முடித்துவீட்டேன்.  





இது நான் செய்யம் முதல் முயற்சி - நேரமிருந்தால் மட்டும் வாசித்துப்பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும். நீங்கள் திட்டினாலும் மகிழ்வேன். 

பணிவுடன் ,
கணேஷ்