ஜெ
சாதிகள் பிறப்பால் வருவதில்லை என்று தருமன் சொல்வதாகவும் அதை பீமன் சொல்வதாகவும் சாதிகள் பிறப்பால் வருவதில்லை என்பதற்கு வேத ஆதாரம் உண்டு என்றும் வெண்முரசில் வருகிறது. இது மகாபாரதத்தில் உள்ளதா? நீங்கள் திரிக்கிறீர்கள் என்று என் நண்பர்கள் இருவர் அலுவலகத்திலே கடுமையாக வாதிட்டார்கள்
சுப்ரமணியம்
அன்புள்ள சுப்ரமணியம்,
நகுஷன் பாம்பாக வந்து தருமனைக் கவ்வ தருமன் அங்கே வந்து பாம்புடன் உரையாட பாம்பு நகுஷனாக மறையும் காட்சி மகாபாரதத்தில் உள்ளது. அது ஒரு உபநிஷத் போல. அந்த உரையாடல் ஒரு நீதிநூலாகவே உள்ளது. அதில் இந்த வரிகளே உள்ளன. அந்த உபநிடத்தின் சுருக்கமே வெண்முரசில் உள்ளது
பொதுவாக மகாபாரததர்சனங்களை, நீதிகளைப் பேசும் பௌராணிகர்கள் இதை அப்படியே கடந்துசென்றுவிடுவார்கள்
ஜெ