இப்போதுதான்
மழைப்பாடல் வாசித்து முடித்தேன். மழைப்பாடலில் வரும் கதைப்பின்னலின் பிரம்மாண்டம் வியக்க
வைக்கிறது. எவ்வளவு கதாபாத்திரங்கள், எவ்வளவு உலகங்கள். யாதவர்களின் வம்சகதை. காந்தாரத்தின்
கதை. குலங்கள் உருவாகி வருவதும் அவற்றின் மலர்ச்சியும். பிரம்மாண்டம் என்றுமட்டும்தான்
சொல்லமுடியும். நவீன இலக்கியத்தில் எழுதப்பட்ட எதற்கும் இது சமானமானது இல்லை. அதன்
கடைசியில் அரசிகள் காட்டுக்குச்செல்லும் இடம் ஒரு பெரிய ஹூமன் டிராமா என்று நினைக்கிறேன்
சத்யமூர்த்தி