Saturday, March 18, 2017

குலாந்தகன்

 
 
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
 
வணக்கம்,குலத்தையே அழிக்கப்போகிறவனுக்கு முழு குல கதைகளும் சொல்லபடுகிறது,புரூரவன்-தருமன் மற்றும் பீமனின் கலவை, நகுஷன்-பீமன் மற்றும் அர்ஜுனனின் கலவை,ஊர்வசி,அசோகசுந்தரி இருவருமே திரௌபதியே,நகுஷன்-ஹுண்டன்-அசோகசுந்தரி என்ற மூவரையும் அர்ஜூனன்-கர்ணன்-திரௌபதி என்றும் அனுகலாம்,அல்லது பீமன்-துரியோதனன்-திரௌபதி என்றும் அனுகலாம்.
 புரூரவனையே தட்ஷணாமூர்த்தியாக வழிபடுகிறார்கள் என்று வருகிறது உண்மையில் எதாவது தொன்மம் உள்ளதா?அல்லது உங்களது புனைவா?
 
இப்படிக்கு
குணசேகரன்
 
அன்புள்ள குணசேகரன்

குலாந்தகன் என பீமன் சொல்லப்படுகிறான். அவனுக்கு குலக்கதை சொல்லப்படுகிறது. உண்மையில் நானே யோசிக்காதது இது

மூத்தவரை தென்றிசை முதல்வன் என வணங்குவது வழக்கம். அதற்கும் தட்சிணாமூர்த்திக்கும் சம்பந்தமில்லை

ஜெ