Tuesday, March 7, 2017

எண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)




     
ஒரு முடிவெடுப்பது என்பது எப்போதும் எளிதானது அல்லநம் வாழ்வுக்கு எவ்வித  பாதிப்பையும்  உருவாக்காத எளிய முடிவாக இருந்தாலும் சரி, அல்லது நம் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய பெரிய முடிவாக இருந்தாலும் சரி, ஒரு முடிவெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாகவே இருக்கிறது. காலியாக உள்ள பேருந்தில் ஒரு இருக்கையைத் தேர்தெடுத்து அமர்வதாக இருக்கலாம். சிற்றுண்டிச் சாலையில் என்ன உணவு சாப்பிடுவது என முடிவு செய்வதாக இருக்கலாம. அல்லது மேற்படிப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பதுஎந்த வேலைக்கு போவதுயாரை மணந்துகொள்வது     போன்ற  முக்கிய முடிவுகளாக இருக்கலாம்



ஒவ்வொரு முடிவுக்கும்  பெரும் விவாதமே நம் உள்ளத்தில் நடக்கிறதுபல எண்ணங்கள் கிளம்பி ஒன்றை ஒன்று மறுத்து, ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்துகொண்டே செல்கிறது. நாம் எடுக்கப்போகும் முடிவு நமக்கு அதிக சாதகமாக  இருக்க வேண்டும், இன்பம் தருவதாக இருக்க வேண்டும்அதிகமான நன்மை தருவதாக இருக்க வேண்டும்இப்போதைக்கு பயனளிப்பதாக மட்டும் இல்லாமல், பின்னர் தொல்லை தராததாகவும் இருக்க வேண்டும். மற்றவரைவிட நம்மை உயர்த்துவதாக இருக்க வேண்டும், நமக்கு நல்ல பேர் எடுத்துதருவதாக அமைய வேண்டும், நமக்கு பொருளியல் ஆதாயம் தருவதாக இருக்க வேண்டும், நம் சுகத்தை குறைப்பதாக இருக்கக்கூடாதுஏதாவது தவறு நேரின் அதற்கான பொறுப்பு தன் மேல் விழாதிருப்பதாக அமைய வேண்டும்அப்படியல்லாமல் அதில் புகழ் கிடைக்குமானால அதன் பெருமை தன்னைச் சார்வதாக இருக்க வேண்டும்அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாக இருக்க வேண்டும், யாரும் இழித்துரைக்கக்கூடியதாக இருக்கக்கூடாது என பலகூறுகளை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இப்படியான கூறுகளை கூடுமானவரை பூர்த்திசெய்யும்  வாய்ப்பை தேர்ந்தெடுப்பது என்பது எளிதல்ல. அந்த முடிவுக்கு நம் உள்ளத்தை ஏற்றுக்கொள்ளவைக்கும் கூற்றுக்களையும் மற்றவரை  இணங்க  வைக்கும் கூற்றுக்களையும் உருவக்கிக்கொள்வது என்பது அடுத்த சிக்கல்அடுத்து  அதை செயல்படுத்தும் விதம் பற்றி முடிவெடுப்பது. அதில் நம் நோக்கம் முழுதும் வெளிப்படையாக மற்றவருக்கு தெரியாமல் இருப்பதும், மற்றவர் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதைப்போல அல்லது வேறு வழியின்றியே இப்படிச் செய்வதைப்போல மற்றவருக்கு தென்படும் வண்ணம் செயல் படுத்த வேண்டும்சற்று சாமர்த்தியமிருந்தால்  சிலசமயம் தான் செய்ய விரும்புவதை மற்றவர் வாயால் சொல்ல வைத்து அதனால்தான்  செய்தேன் என்பதாக செய்துகொள்ளலாம்.     
 

  விபுலையும் வித்யுதையும் ஒரு பச்சிளங்குழந்தையை கொன்று சமைக்க பணிக்கப்பட்டுள்ளார்கள்இப்போது அவர்களின் சிக்கல் அந்தச் செயலைச் செய்வதா அல்லது மறுப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டும், தன்னை சுற்றி இருப்பவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும். அதன்படி அதை செயல்படுத்தவேண்டும்அவர்கள் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் அவர்களுகிடையேயான உரையாடல்களாக ஓடுகின்றனஇறுதிவரை அவர்களால் அம்முடிவை எடுக்க முடியவில்ல. அப்போது முதுசேடி மேகலை வந்து அவர்களுக்கு உதவுகிறாள்அவர்கள் தன் மனதை, பிறரை, சமாதானம் செய்துகொள்வதற்கான காரணங்களை உருவாக்கித் தருகிறாள்அவர்களுடைய நீண்ட உரையாடலில் வழியே ஒரு முடிவை மனித மனம் எப்படி எடுக்கிறது என்பதின்  ஒரு நுணுக்கமான உளவியலை வெண்முரசு இன்று வெளிப்படுத்துகிறது.

தண்டபாணி துரைவேல்