ஜெ
ஒரு யதார்த்தக்கதையில் தற்செயல்கள் போன்றவை கதையை நகர்த்திக்கொண்டுசென்றால் அவை நமக்குச் சலிப்பை அளிக்கின்றன. நடைமுறைநம்பகத்தன்மை தேவை என்கிறோம். ஆனால் கிளாஸிக்குகளில் தற்செயல்கள் மிக முக்கியமானவை. உதாரணமாக நகுஷன் அந்த ஒற்றனையே மரணப்படுக்கையில் சந்திப்பது.
ஊழ் என்னும் கருத்துத்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன்
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்
ஊழ் மட்டும் அல்ல. செவ்வியலுக்கு இந்தவகையாக தற்செயல்கள் நிகழ ஒரு டெம்ப்ளேட் உண்டு. அதை நாம் முன்னரே அறிந்திருக்கிரோம். அதுதான் காரணம். வெண்முரசு எப்போதும் அந்த தொன்மப்பாதையில்தான் செல்லும்
ஜெ