Monday, March 27, 2017

தமிழ் பூக்கள்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

இந்த மாமலர்-50 இல் மலர்ந்த மணமிகு தமிழ் பூக்கள்! நுகர நுகர தமிழ் பித்து தலைக்கேறுகிறது!!

"வஞ்சம்கரந்த அவள் புன்னகை கிள்ளி எடுத்த சிறுசெம்பட்டு என ஓரம் கோணலாகியிருக்கும்"
"பெருவெள்ளமென பொழிந்து நதிகளை நிறைக்கும் மழையை இளங்காற்றுகள் சுமந்துவருகின்றன. மிகமிக மென்மையான ஒன்று அவ்வரிய பணியை செய்யும்…” 
"ஆனால் தந்தையைக் கடக்காமல் மகள் தன் மைந்தனை பெறமுடியாது என்பதே உலகநெறி” 
"மலர் சூல்கொள்கையிலேயே கனிகொய்ய அம்பெய்பவர் அவர்”  
"ஒன்று தொட்டு எடுக்கையில் நூறு கைவிட்டு நழுவுவதே அரசாடல் என்றும் நூறுக்கும் அப்பால் ஒன்று எழுந்து கைப்படவும் கூடும்"
“எரி பிறப்பதை மெல்லிய சருகுகள் முதலில் அறிகின்றன. பின்னரே அறிகிறது பெருங்காடு” 

நன்றி,

அன்புடன்,
அ .சேஷகிரி.