Thursday, August 16, 2018

ஆடி


ஜெ

சஞ்சயன் எப்படி ஞான திருஷ்டியில் போர்க்களத்தைக் கண்டு சொல்லப்போகிறான் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அதை நீங்கள் யதார்த்தமாகவே அமைப்பீர்கள் என நினைத்தேன். ஏனென்றால் வெண்முரசில் குறியீடாக அமையாத எல்லா இடங்களும் யதார்த்தமே.  வீரம் போன்ற சில இடங்கள் சாகசக்கதைகளுக்குரிய மிகை. இதில் எங்கே மிகை வருகிறது எங்கே அது மறைகிறது என்பது வாசகனுக்குப்பெரிய சவால். ஆடியில் பார்க்கிறான் என்றதுமே உற்சாகமாகிவிட்டேன். ஆடியைக் கண்டுபிடித்தது  கலிலியோ என்பது மேற்கே உள்ள நம்பிக்கை. ஆனால் மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார்கள் என்பது இன்றைய வரலாறு. அவர்கள்தான் கண்ணாடியையே கண்டுபிடித்தவர்கள். தொலைநோக்கிகளுடன அவர்கள் உலகைச் சுற்றிவந்து  ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கிறார். அந்த பீதர்கண்ணாடி நல்ல படிமம். அது முழுசாகவும் பார்க்கும். ஒரு துளியையும் பார்க்கும் என்பதே மிகப்பெரிய அர்த்தம் கொண்டது

ஆனந்த்