Sunday, August 19, 2018

சங்கன்




சங்கன் உணவளிக்கும் விடங்கரிடமும் தன் தமையனாகிய ஸ்வேதனிடமும் விடைபெற்றுக்கொள்ளும் காட்சியே அன்றைய களப்பலி அவனே என்பதைக் காட்டிவிடுவதனால் அவனுடைய ஒவ்வொரு எண்ணமும் பதற்றத்தை அளிப்பதாக உள்ளது. அவன் நெகிழ்ச்சியாகப் பேசவில்லை என்றாலும் அவனுடைய மனம் தெரிகிறது. அந்தி எழுகையில் இறையருளிருந்தால் மீண்டும் பார்ப்போம்என்று சங்கன் சொல்கையில் ஸ்வேதன்  எங்கிருந்தாலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருப்போம், இளையோனேஎன்கிறான். சங்கன் குனிந்து ஸ்வேதனின் கால்களைத் தொட்டு வணங்குகையில் என்றும் என் தந்தையின் இடத்தில் தாங்கள் இருந்தீர்கள்.என்கிறான். ஸ்வேதன் சிறப்புறுக! தெய்வங்கள் துணையமைக! மூதாதையர் வாழ்த்துக!என்று வாழ்த்துகிறானே ஒழிய ஆயுஷ்மான் பவ என்று சொல்லவில்லை. அவர்களுக்கே எல்லாம் தெரிந்திருக்கிறது. நுட்பமான கூர்மையான காட்சி அது

அருண்