போருக்கான
ஏற்பாடுகளில்
சாவு, மருத்துவம் இரண்டும் மட்டும் விரிவாகப் பேசப்படவில்லை. போர் ஏற்பாடுகளில் படைகள் நகர்வது எப்படி என்பது மட்டுமே விரிவாகச் சொல்லப்படுகிறது. நகரும் பாடிவீடுகள் ஒரு ஆச்சரியமான மிகைக்கற்பனை. ஆனால் வேறு வழியில்லை என்றும் தர்க்கபூர்வமாகத் தோன்றுகிறது. ஒரு பெரிய காளால்படையை நிறுத்தி மீண்டும்
கிளப்புவது மிகவும் கடினம். அதேசமயம் மந்திராலோசனை நடத்தாமலும் இருக்க முடியாது. உணவு உட்பட எல்லாவற்றையும் இப்படித்தான் செய்யமுடியும்.
நான் ஈராக் போர் சமயத்தில் இருந்திருக்கிறேன். குளிக்கக் கூடாது துணி துவைக்கக்கூடாது.
பேட்டரியால் இயங்கும் எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது. அதெல்லாம் வளங்களைச் சேமித்துக்கொண்டு போர் செய்வதற்கான
வழிமுறைகளாக கருதப்பட்டன. போரை விட போருக்கான இந்தப்பயணம் மிக முக்கியமானது. மகாபாரத
நாவல்கள் , சினிமாக்கள் ,சீரியல்கள் எதிலுமே இதெல்லாம் இல்லை
மகாதேவன்