Monday, August 27, 2018

வேங்கை



அன்பு ஜெமோ சார்,                         

செந்நாவேங்கை நிறைவுற்றிருக்கிறது. சாத்யகியுடன் அத்தியாயம் தொடங்கியவுடனே நாவல் நிறைவுறப் போகிறதென தோன்றியது.
                         
சாத்யகியில் தொடங்கியது சாத்யகியில் முடிந்துள்ளது.
       
பதினெட்டு நாள் முடிவின்  சிறு  வடிவாக முதல் நாள் முடிவு பெருஞ் சோர்வையும் வெறுமையையும் அளிப்பதாக முடிந்துள்ளது.
                             
அர்ஜுனன்,சாத்யகி, யுதிஷ்டரர்,   பீமன்  என   வாழப் போவோரெல்லாம் பெருந் துயருடனும், சோர்வுடனும், கசப்புடனும் இருக்க, சாகப் போகும் மைந்தரெல்லாம் விளையாட்டும்  நகையாட்டுமென கொண்டாட்டமாய்  இருந்தனர்.'

           
நீர்க்கோலம் நிகழ்கையில் விராடர் உத்திரனுக்கான உறவு பற்றி விவாதக் களத்தில்   கடிதங்கள் இருந்தன. செந்நா வேங்கைக்கு பின்  அதனை குலாட இளவரசர்களுடனும் இணைத்து பார்க்க வேண்டியுள்ளது.ஒரு கடிதத்தில் கடலூர் சீனு குந்தி கர்ணனுக்கு மட்டுமே அன்னையென இருந்தாள் என்றெழுதியிருந்தார்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா