Monday, August 13, 2018

ரோகிணி




ஜெ

ரோகிணியின் வருகையே அரவானி என்பதைக் காட்டிவிட்டது. எப்படி அது நிகழப்போகிறது என்பதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்றுதான் அந்தப்பெயர் உறுத்தியது. ரோகிணி கிருஷ்ணனுக்குரிய நட்சத்திரம். அஷ்டமி ரோகிணி. பல கதைகளில் கிருஷ்ணன்தான் பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். இங்கே இந்த ரோகிணியும் கிருஷ்ணனதானா என்ற எண்ணம் வந்தது

சாரங்கன்