அன்புள்ள ஜெ
யுதிஷ்டிரர் பீஷ்மர் துரோணர் ஆகியோரைச் சந்தித்து
ஆசிபெறும் காட்சி புதுமையாகவும் கூர்மையாகவும அமைந்திருந்தது. உங்களை எப்படிக் கொல்வது
என அவர்களிடமே கேட்டுத்தெரிந்துகொண்டார் என்பது கதைக்கு சரியாக இருந்தாலும் பொருந்தாமலும்
உள்ளது. அது அவர்கள் துரியோதனனுக்கு விசுவாசமாக இல்லை என்பதையே காட்டும். அதோடு அந்தச்செய்தி
துரியோதனனுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பான் என்பதும் முக்கியமான கேள்வி. இதில் அவர்கள்
அச்செய்தியைத்தான் சொல்கிறார்கள். ஆனால் பூடகமாகச் சொல்கிறார்கள். அந்த வரிகள் கவித்துவமாகவும்
அமைந்துள்ளன.
அருண்