ஜெ
ஒருவழியாகப் போர் தொடங்கவிருக்கிறது. இதுவரை
போர் எப்ப தொடங்கும் என்பதே எண்ணமாக இருந்த்து. தாமதமாவது பதற்றத்தை அளித்தது. ஆனால்
போர் நெருங்கி வியூகங்கள் முடிந்து இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தபோது
ஒரு வகையான சோர்வும் ஆர்வமில்லாத மனநிலையும்தான் ஏற்படுகிறது. நாவலே முடிந்துவிட்டது
போலத் தோன்றுகிறது. இனி என்ன எல்லாம் தெரிந்தகதை தானே என்ற எண்ணம் ஏற்படுகிறது. வியூகங்களை
வாசித்துக்கொண்டிருந்தபோது இதெல்லாம் என்ன, இதற்கெல்லாம் அர்த்தமே இல்லையே என்ற எண்ணம்
வந்து சோர்வு உருவாகிறது
ராம்சந்தர்