Monday, August 27, 2018

சிரிப்பு



அன்புள்ள ஜெ

பிணங்களை அடக்கம் செய்யும் இடத்தில் ஒவ்வொருவரிடமும் ஒரு சிரிப்பு இருக்கிறது என்று சாத்யகி பார்க்கும் இடம் முக்கியமானது. ஏனென்றால் அதை நான் என் வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். இறப்புவீடுகளில் சடங்குசெய்பவர்கள் கிண்டல் செய்வார்கள். சிரிப்பார்கள். ஒருவகையான இளிப்பு போலிருக்கும். அது அந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதம். அல்லது அவர்களில் அப்போது குடியேறும் ஏதேனும் தெய்வங்கள் அப்படி மனிதனை நோக்கி ஏளனம் செய்து சிரிக்கின்றனவா என சாத்யகி யோசிக்கிறான். அந்த வரி பதறச் செய்தது. அதிலும் பாரதப்போர்போன்ற கொடுமையான போர்வெளியில் அப்படி யோசிப்பதே ஒரு பெரிய கொடுமையான விஷயம்தான்

செல்வன்