Tuesday, August 14, 2018

மழைப்பாடல் பற்றி




ஜெ ,

நீங்கள் கோவையில் நிகழ்த்திய வியாச உரையில் காவியத்தின்  குணங்களாக  ஐந்து அம்சங்களை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்  , அதில் ஒரு அம்சம்  பெருந்தன்மை (  அல்லது இவ்வார்த்தை   சொல்லும் அர்த்தத்தில் வரும் ஒரு வார்த்தை ).
திருதராஷ்டிரனின்  திருமண நிகழ்வின் முன்பின்  தருணங்களில் வசுமதியின்  இயல்பில் இந்த அம்சத்தை கண்டேன் .

அவளை வேண்டாம் என சொன்ன மகத  மன்னனுக்கு மிக சிறந்த பரிசுகளை  அளிக்க சொல்கிறாள் , மேலும் அவமதிப்பை  பொருட்படுத்தாது அவர்கள் நலம் பெற வேண்டும் என்கிறாள் . பரிசளது  என்பது 'அவர்  நாண நன்னயம்  செய்து விடல்'  மாதிரியான ஒன்றுதான் , ஆனால் அதையும் தாண்டி அப்படி அவமதிப்பு  என்ற விஷயத்தையே மறந்து சிறப்புற  வாழ்வு அமைய வேண்டும் என்கிறாள் , இதெல்லாம் மிக பெரும் மனம் கொண்டவர்களின்  குணம் , இந்த குணம்தான்  அவளை தன் கண்ணிற்க்கு காட்சியே  வேண்டியதில்லை எனும் முடிவுகளை எடுக்க வைக்கிறது ,
......
இன்னொன்று வசுமதியின் மனம் திருமணத்திற்கு  பிறகு பிறந்த நிலத்திலிருந்து  பிரிந்து திருதராஷ்டிரன்க்கான துணையான  மாறும்  தருணங்கள் , அவள் மனம் நிறைந்து  மாறுவது  அழகாக வந்துள்ளது  . தாலிப்பனை  ஓலையில்  அமுதகலச குறி எழுதி தாலியாக மாற்றும் நிகழ்வில் அவள் மனம் பிறந்த நிலத்தில் இருந்து விடுபடுகிறது  , திருதராஷ்டிரன் போன்ற ஒருவரை அடைந்து அவனின் ஆழத்தில்  சென்று அவனை அறிந்து(இசை ) கொண்ட பிறகு அவனுக்கானவளாக  தன்னை மாற்றி (  கண்ணை மறைத்து துணி காட்டிக்கொள்வது  )  கொள்கிறது .
......
ஜெ , சில வார்த்தைகளை மனதிற்குள் சேமித்து  வைக்கிறேன் , அவை எதை குறிக்கின்றன  என அறியாததால்  , சிலசமயம் நாடு நகரங்களின்  பெயர்கள் , சில சமயம் மரங்கள்  போன்றவற்றின் பெயர்கள் , ஸாமி, பி்லு போன்ற மரங்கள் எல்லாம் எவை  என அறிந்து கொள்ள சேமித்து வைத்திருக்கிறேன் :)

ராதா கிருஷ்ணன்