இமைக்கணம் முன்னரே வந்துவிட்டமையால்
மீண்டும் கீதைத்தருணம் வரவில்லை. அதற்குப்பதில் சரம ஸ்லோகம் வந்துவிட்டது. நேற்றுமுன்தினம்
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்த்து. கீதையுரை கேட்டபின்னரும் அர்ஜுன்னுக்கு வந்த துக்கம்
சரிதானா? ஆனால் அவன் அரவானின் சாவில் துக்கப்படாமலிருந்தால் மனிதனே இல்லை. அபிமன்யூ
சாவில் அவன் அழுதுபுலம்பியதெல்லாம் மகாபாரதத்திலேயே உள்ளது. ஆகவே அதைச் சொல்லாமலும்
இருக்கமுடியாது. ஆனால் அதற்கான சரியான விடை வெண்முரசில் வந்துவிட்டது. முக்கியமான பதில் அது. அது விடை. நான் சென்றடையும் எல்லை. மூத்தவரே, நான் கிளம்புவது என் துயரிலிருந்தும்
தத்தளிப்பில் இருந்தும்தான். மீண்டும் மீண்டும் பலநூறு முனைகளிலிருந்து அந்த
புள்ளிக்குச் சென்றுசேர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றான்
அர்ஜுனன். “நகர்நடுவே தெய்வம் என என்னுள் அது
உறைந்துள்ளது. அங்காடிகளில் அடுமனைகளில் மதுவிடுதிகளில் எங்கும் அதன் நோக்கு
திகழ்கிறது” தத்துவம் விடைதான். ஆனால் வாழ்க்கையில் இருந்து வினாக்கள்
எழுவதை தவிர்க்கமுடியாது. வினா எழாமலாகிவிட்டால் அதன்பின் அந்த விடையும் தேவையில்லை.
அந்த விடை ஒன்று இருந்தால்போதும். அது ஒரு பற்றுகோடு. அது நம்மை நிலைகொள்ளச் செய்யும்.
ராமச்சந்திரன்