ஜெ
பீமனின் குணாதிசயம் நாவல் முழுக்க ஒரேமாதிரி கசப்பும்
கொந்தளிப்பும் நையாண்டியும் கொண்டவனாக வந்துகொண்டிருக்கிறது. போருக்கு முந்தைய
தருணத்தில்கூட பீமனின் குணம் அப்படியேதான் இருக்கிறது. மாற்றமே இல்லை. தன்
மூத்தவரை அவன் கிண்டல் செய்வதை பலசமயம் ரசிக்கமுடியவில்லை. அதைவிட போரையே
அர்த்தமில்லாத ஒன்றாகத்தான் அவன் பார்க்கிறான். கங்கைக்கு அடியில் சென்று அவன்
குடித்த நாக நஞ்சு அவன் ரத்தத்தைவிட்டு நீங்கவே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது
மாதவன்