ஜெ
நான் என்
மகனை ஒரு சாலை விபத்திலே பறிகொடுத்தேன். எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் ஒவ்வொரு
நாள் காலையிலும் முதலில் மனதில் எழும் நினைப்பு அவன் முகம் தான். இன்றைக்கும் மாத்திரை
இல்லாமல் தூங்கமுடியாது. நான் தினசரி இரவு வெண்முரசு வாசித்துவிட்டுத்தான் தூங்குவேன்.
நேற்று முழுமையாகவே தூக்கம் கிடையாது. ஸ்வேதனின் சாவுக்குப்பின் என்னால் தூங்க முடியவில்லை.
அழுதுகொண்டே இருந்தேன். இனிமேல் வாசிக்கவேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் வாசிக்கவேண்டும்
என்று நினைக்கிறேன். ஏனென்றால் வாசிப்பதன் வழியாக நான் இதிலிருந்து விடுபட ஒரு வழிதெரியும்
என்று நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையிலெ ழுந்தபின் வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.
வெண்முரசை நிறைய வாசித்துவிட்டேன். இனிமேல் நிறுத்தவிடாது
சந்திரகுமார்