கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்
அன்புள்ள ஜெ
அருணாச்சலம் மகாராஜனின்
நீண்ட கட்டுரையை முழுநாளும் அமர்ந்து பல படிகளாக வாசித்துமுடித்தேன். கிராதம் நாவலை
ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சி. இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கள்
அந்தந்த அத்தியாயங்களிலிருந்து எழும் எதிர்வினைகளாகவே இருந்தன. இத்தகைய கட்டுரைகளால்தான்
நாம் முழுமையாகப்புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். கிராதம் ஒருபக்கம் தன்னை ஒரு சாகசநாவலாகவும்,
சாகசத்தை மெய்த்தேடலாக கொண்ட காவியமாகவும் உருவகம் பண்ணிக்கொண்டிருப்பதையும், அதன்
படிநிலைகள் வழியாக வேதம் உருவாகிவந்த வரலாற்றின் பெருஞ்சித்திரமே இருப்பதையும் காணமுடிந்தது.
அருணாச்சலம் அவர்களுக்கு நன்றி
செந்தில்குமார்.