Sunday, August 12, 2018

ஷத்ரியர்கள்




ஷத்ரியர்கள்தான் நாடாளவேண்டும், மற்றவர்கள் ஷத்ரியர்கள் ஆகலாம் என்றுதான் கிருஷ்ணன் சொல்வதாக வெண்முரசில் வருகிறது இது என்னைக் கொஞ்சம் குழப்பியது. என்ன செய்வது என்று நான் பலகோணங்களில் வெண்முரசிலேயே தேடினேன். ஆச்சரியமாக மழைப்பாடலிலேயே இதற்கான ரெஃபரன்ஸ் வந்துள்ளது. ஷத்ரியர்களுக்கு அவர்களுக்கான பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அவர்கள் ஓர் அநீதியைக் கண்டால் அங்கே எதிர்த்து நின்று சாகவேண்டும். ஓடிப்போனால் மரண தண்டனை என்கிறது நெறி. அந்த வகையான பொறுப்பு ஏதும் மற்ற வர்ணத்தவர்களுக்கு இல்லை. ஆகவே ஆட்சி செய்பவர்கள் ஷத்ரியர்களுக்குண்டான பொறுப்பும் கடமையும் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதைத்தான் அந்த வரி சொல்கிறது என்று புரிந்துகொண்டேன்

ராம்