Friday, August 17, 2018

கருவிகள்





அன்புள்ள ஜெ

வெண்முரசில் கருவிகளை பழைய பாணியில் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பது வந்தபடியே இருக்கும். நான் ஒரு எஞ்சீனியர் என்பதனால் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். கைவிடுபடைகளை எல்லாம் ஒருவகையான தத்துவக் குறியீடுகளாகவே புரிந்துகொள்கிறார்கள். அந்த கவித்துவம் எனக்குப்பிடித்திருந்தது. அதை வாசிக்க வாசிக்க நானும் எல்லா கருவிகளையும் குறியீடுகளாகவே பார்க்கிறேன். உதாரணமாக ஸ்பானர் எவ்வளவு பெரிய குறியீடு இல்லையா?

இன்றைக்கு வந்த தொலைநோக்கி பற்றிய பகுதியும் அருமை. அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது தூரத்துடன விளையாடும் கருவி. இரண்டு நீர்த்துளிகளை ஒன்றன்பின் ஒன்றென வைத்தால் தொலைவு அவ்விரண்டிற்கும் நடுவே பலமடங்கு மடிந்து சுருங்கிவிடுகிறது என நான் கண்டுள்ளேன். அண்மையும் சேய்மையும் தங்களை நிலைமாற்றிக்கொள்கின்றன என்ற வரி மிகவும் அழகானது


செந்தில்குமார்