அன்புள்ள ஜெ
அரவானின் சபை விவாதங்கள் அனைத்தும் முழுமையான தர்க்க
ஒழுங்குடன் உள்ளன. அரவான் களப்பலி ஆவது வெறும்
நம்பிக்கை மற்றும் சடங்குகளால்தான் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அவன் களப்பலியாவதற்குக் காரணம் இப்படி தருக்கபூர்வமாக விளக்கப்படும் என
நினைக்கவே இல்லை. அதோடு மகாபாரதத்தில் ஏற்கனவே உள்ள
நிகழ்ச்சிகளையே ஒருங்கிணைத்து அதற்கான நியாயங்களை உருவாக்கியிருப்பது சிறப்பு.
அரவான் சொல்லும் எல்லா நியாயங்களும் சரியானவை. ஆனால் அவான் தன் குடியினரை தன் கையாலேயே கொல்லாமல் இருக்கவும் அதே சமயம்
அன்னை சொல்லை நிறைவேற்றி பெரும்புகழ்கொள்ளவும் அதைச்செய்தான் என்பதுதான் இன்னும்
சரியாக உள்ளது. அவனுடைய கதையின் எல்லா அம்சங்களையும்
கொண்டுவந்துவிட்டீர்கள். அவனுக்கான எல்லாமே முன்னரே கதையில் சொல்லப்பட்டுவிட்டன என்பதை கதை
முடியும்போது நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்தபோதுதான் உணரமுடிந்த்து
எஸ்.விஜயராகவன்