ஜெ
போர்க்களத்தின் பல விவரணைகளில் என் மனதை இப்போதும் பாதிப்பது ஒன்றுதான். அம்பு சென்று தைக்கும்போது அந்த வீரனின் கண்களில் தெரியும் திகைப்பு.
அம்பு விம்மிச் சென்று தைக்க உடல் திடுக்கிட்டு பாய்ந்துவந்த கரிய புரவியிலிருந்து சரிந்து உதிர்ந்த கௌரவ வீரனின் இறுதி விழிமின்னை ஒருகணம் அருகிலென கண்டான்
என்ற வரி. ஓர் அம்பைச் செலுத்துபவனுக்கும் அதனால் சாகிறவனுக்கும் நடுவே விதிதான் ஒரு கோட்டைப்போட்டு வைத்திருக்கிறது. யார் சாகவேண்டும் எவர் கையால் சாகவேண்டும் என்பதெல்லாம் முடிவுசெய்யப்பட்டுவிட்டபின்னர்தான் போர் நிகழ்கிறது. அந்தக்கணத்தில்தான் அது தெரிகிறது. அந்தப் பதைப்பு அதனால்தான்
ஜெயராமன்