அன்புள்ள ஜெ
சல்யரை யுதிஷ்டிரர் சந்திக்கும் காட்சி மிகநுட்பமாக
உள்ளது. சல்யரிடம் கர்ணனை அவமதித்து எங்களுக்கு உதவுக என்று அவர் கேட்டதாக மகாபாரதத்தில்
உள்ளது. அது அவருடைய ஆளுமையையே சின்னதாக ஆக்கிவிடுகிறது. இப்போது அவர் அப்படிச் செய்தது மிகச்சரியாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அவன் பாண்டவர்களைக்
கொல்லக்கூடாது என்ற பயமே சல்யரை அப்படிச் செய்யவைத்தது என்னும்போது அவருடைய குணாதிசயம்
மேலே செல்கிறது. அதோடு அவருக்கும் கர்ணனுக்குமான அந்த மர்மமான உறவும் அங்கே அர்த்தமாகிறது.
அந்த உரையாடலே ஊசிமுனை போல அமைந்திருக்கிறது.
எஸ். சங்கர்