ஜெ
தர்மயுத்தத்துக்கான அந்தணரின் நிபந்தனைகளை வாசிக்க
நேர்ந்தபோது ஒவ்வொரு நிபந்தனையையும் யார் யார் எப்போதெல்லாம் மீறினார்கள்
என்றுதான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். தீயும் நஞ்சும் பயன்படுத்தப்படவில்லை என்று
தோன்றியது. ஆனால் நாகாஸ்திரமும் கடைசியில் பாண்டவர்களின் பிள்ளைகளை எரித்ததும்
ஞாபகம் வந்தது. அப்படியென்றால் இந்த நிபந்தனைகள் எவருக்காக? இன்றைக்குக்கூட இப்படி
பல நிபந்தனைகள் உள்லன. செஞ்சிலுவைக்காரர்களைக் கொல்லக்கூடாது என்றெல்லாம். ஆனால்
கிளஸ்டர் குண்டுபோட்டு கொன்று குவிக்கிறார்கள். இதெல்லாம் எந்த நம்பிக்கையில்
சொல்லப்படுகின்றன? ஒன்றுமே புரியவில்லை
ராஜாராம்