Thursday, August 23, 2018

பின்னணி





திரு ஜெயமோகன் ஐயா,

                                   உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 2014 ஆம் ஆண்டு பிற்பகுதி நான்
விஜய் டிவியில் மகாபாரதம் பார்த்து முடித்திருந்த நேரம் அது. எனக்கு அதில் ஏதோ முறனாக பட்டது. எனக்கு மகாபாரததை முழுமையக தெரிந்து கொள்ள ஆசை. நான் அதற்கு முன் வருடம் வரை என் கல்லூரி நாட்களில் நாவல்கள் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். எனவே மகாபரதம் நூலக படிக்க விரும்பினேன். அப்போதுதான் எனக்கு பல்கலை.யில் இருந்து இணையம் கிடைத்திருந்த நேரம். என்வே என் தேடலை தொடங்கினேன். அப்போது செய்யுள் வடிவில் ஒருவர் இணையத்தில் எழுதி வ்ந்தார். சில நாட்களிலேயே நான் வெண்முரசை கண்டறிந்தேன். அன்று என்க்கு தேர்வு நாள். தேர்வுக்கு படிக்காமல் நான் வெண்முரசை படிக்கலானேன். ஆனால் என் முது அறிவியல் படிப்பில் நான் ஒரு தேர்வில் கூட நான் தோற்கவில்லை.வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தவுடன் நான் உங்கள் கொற்றவை பற்றி கேள்வி பட்டேன். எனக்கு உங்களுடைய விஷ்ணுபுரம் படிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. நான் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றே விலங்கவில்லை. சரி விஷயத்துக்கு வருகிறேன் என் போன்ற வாசகர்களுக்காக வெண்முரசு நிகழும் கதைக்களத்தின் நில வரைபடத்தை நம் தமிழில் உருவாக்கி தற முடியுமா? 

எஸ்.முனீஸ்வரன்

அன்புள்ள முனீஸ்வரன்

ஏற்கனவே இவை என் இணையப்பக்கங்களில் வெளியாகியிருக்கின்றன. பார்க்கவும்.

ஜெ