Saturday, August 18, 2018

பீமன்




ஜெ,

போர் தொடங்கும் பொழுதில் கிருஷ்ணன் துயருற்றிருக்கிறார்.  அந்தத் துயரை அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பீமன் மிகச்சரியாகப்புரிந்துகொள்கிறான். அர்ஜுனன் அதை கிருஷ்ணனின் குலம் சார்ந்த துக்கமாகப் பார்க்கிறான். பீமன்தான் அது தெய்வம் கொள்ளும் துக்கம் என்று புரிந்துகொள்கிறான். அர்ஜுனனை விட பீமன்தான் கிருஷ்ணனை மிகச்சரியாகப் புரிந்துகொள்கிறான். மாத்வ சம்பிரதாயத்தில் உள்ள நம்பிக்கை இது. அர்ஜுனனின் வழி அறிவின் வழி. பீமனின் வழி நம்பிக்கையின் வழி. நம்பிக்கையே கண்ணனை அணுகுவதற்கு மிகச்சிறந்தது.  பீமனின் அவதாரமாகவே மத்வரை மத்வ சம்பிரதாயம் எண்ணுகிறது. பீமனின் கசப்பு கொந்தளிப்பு எல்லாம் மேலேதான். அது அவன் அன்பானவன் என்பதனால் வரும் உணர்வு. உள்ளுக்குள் அசையாத பக்தி கொண்டவனாகவே இருக்கிறான்

ஸ்ரீனிவாசன்