தளும்பிய கண்ணீரை அடக்கி, மனதை ஆசுவாசம் செய்ய வேண்டியதாகி விட்டது.....
வெறும் ஒரு நாளே கடந்திருக்கிறது... இன்னும் பதினேழு நாட்களும் அதன் பின்னர் அசுவத்தாமனின் வெறியாட்டும் இருக்கின்றன...
இறுதியில் கிடைத்தது வெற்றியா....
கிருஷ்ணையின் மணவிழாவின் போது நடந்த வீர விளையாட்டும், போருக்கு முன் இரு தரப்பு இளையோரும் பந்தாடியதும், அரவான் தன் முடிவை அறிவித்தவுடன் இளையோர் பேசியதும் நினைவில் வருகிறது. கிட்டதட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்திரபிரஸ்தத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்த பீமன், இளையோருடனும் அவர்தம் குழந்தைகளோடும் குலாவியது கண்முன் வந்து போகிறது.
கடைசி சங்கு ஒலித்ததும் என்னில் எழுந்த கேள்வி "இளையோரின் இழப்பை பீமன் எப்படி தாங்குவான்"
நட்பு நாட்டு இளவரசர்கள் அறிமுகம் ஆன போதெல்லாம் கலங்கியவர் தருமன். அவரை விட இது பீமனையே தாக்கும்.
ஸ்வேதா சம்பத்