ஜெ
அரவான் களப்பலி பற்றி வாசித்தபோது அதற்கான ரெஃபரென்ஸ் முன்னாடியே
குருதிச்சாரலிலும் காண்டீபத்திலும் வந்ததை நினைத்துக்கொண்டேன். குருதிச்சாரலில்
குழந்தைகளை , இளவரசர்களை பலிகொடுப்பதைப்பற்றி வருகிறது. அதைவிட
அரவான் பிறக்கும்போதே எல்லா செய்திகளும் சொல்லப்படுகின்றன. நாகர்குடியில் தற்கொடை
கொடுக்கும் வழக்கம் உள்ளது காட்டப்படுகிறது. அதேபோல அவர்கள் பிறக்கும்போது
ஆணும்பெண்ணும் அற்றவர்களே என்பது காட்டப்படுகிறது
இந்த செய்திகள் எல்லாமே
புனைவாகத்தான் வாசிக்கப்படவேண்டும். ஆனாலும் அந்த நாகர்குடியின் ஆசாரங்களும்
அவர்களின் நம்பிக்கைகளும் நம் மண்ணின் தொன்மையான சாஸ்திரங்களையும் அதற்கும்
அப்பாலுள்ள வரலாற்றையும் புரிந்துகொள்ள உதவுகின்றன
ராஜசேகர்