அன்புள்ள ஜெ
சங்கனின் போர்க்கோலம் ஒரு பதற்றத்தை நிலை நிறுத்தியது. ஆனால் அவன்
நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு காலையில் நிம்மதியாக எழுந்துகொள்கிறான். அவனுடைய
அந்தக் காலை வழியாக அன்றைய நாளின் எல்லா சிறிய செய்திகளையும் ஒன்றாகவே
காணமுடிகிறது. அரவானின் தவம், அரவானியாகிய
ரோகிணியின் தனிமையும் பரவசமும், ஸ்வேதனின் அமைதி எல்லாமே துலங்கி வருகிறது.
வானத்தின் அமைதியிலிருந்து அப்படியே பெருகி அரவானின் மரணத்தில் முடியும் அத்தியாயம்
ஒரு பெரிய வாணவேடிக்கைபோல பொறியாக எழுந்து வெடித்து எழுகிறது
எம்.ஆடவல்லான்