Friday, August 24, 2018

பீஷ்மரின் போர்வெறி




ஜெ

பீஷ்மரின் போர்வெறி எதிர்பாராதது. அவர் வாழ்க்கை முழுக்க போரைத் தவிர்க்க நினைத்தவர். போர் நின்றுவிடவேண்டும் என விரும்பியவர். போரில் அரைமனதாக ஈடுபட்டவர். ஆனால் வெறியுடன் அவர் அனைவரையும் கொன்று குவிக்கிறார். இளையோரை அவர் ஏன் கொல்கிறார் என்பதற்கு வெண்முரசு அளிக்கும் விளக்கம் இது

மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது.

வாசிக்கும்போது திகைக்கவைத்த வரி இது. பலமுறை இதை வாசித்தேன். நிறுத்திவிட்டு மீண்டும் வாசித்தேன். இந்த வரியைக் கடந்துசெல்ல எளிதில் இயலவில்லை. ஏனென்றால் எல்லாருமே இதை உணர்ந்திருப்போம். இளைஞராகவும் உணர்ந்திருப்போம். முதியவராகவும் உணரமுடியும்.

ஆர். கணேஷ்