Sunday, February 18, 2018

மதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)




          ஒவ்வொருவருக்கும் தன்னறம் என ஒன்று அமைகிறது  அது எப்படி என்று நாம் குறிப்பாக ஒரு காரணத்தைக்கூற முடியாது. பிறவியிலேயே வருவதாகவும்,  வளர்ப்பினால் வருவதாவும், சூழலினால்  வருவதாகவும், தான் அடையும் திறன் மற்றும் ஞானத்தினால் வருவதாகவும்  இருக்கலாம். அல்லது இவை அனைத்தின் பங்கும் அதில் இருக்கலாம்.    ஆனால் ஒருவன் தன் தன்னறத்த்தின்படி ந்  அதை செயப்படுத்தாமுடியாமல் மேலும் அதற்கு எதிர்மாறாக செயல்படும் நிலைக்கு ஆளகும்போது அவன் பெரிய அளவுக்கான பாதிப்புக்கு ஆளாகிறான். அவனடையும் பாதிப்பு அவன் தன் தன்னறத்தை பேணுவதில் எவ்வளவு தீவிரத்துடன் இருந்திருந்தான் என்பதைப்பொறுத்தது.  அப்படி தீவிர பாதிப்புக்குள்ளாகி   தன்னை மீட்டுக்கொண்டு தன் தன்னறத்தை பேண முடியாமல் போகும் ஒருவன் ஒரு வகையில் மனதளவில் இறந்து விடுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பின் அவன் வாழ்வது அவனுடைய வாழ்வல்ல. சிலர் தன் தன்னறத்தை சூழலின் காரணமாக  சுருக்கிக்கொண்டு வாழ்கிறார்கள். இதுவும்  ஒருவகையில் தன்னை மாய்த்துக்கொள்வதற்கு சமமானத்தான். அவர்கள்  ஒரு இயந்திரம்போன்று அல்லது நடைபிணமென வாழ்கிறார்கள்.   அப்படிப்பட்டவராக நாம் பீஷ்மரைக் காண்கிறோம். தான் கொண்டிருந்த அனைத்து அறங்களையும் ஒவ்வொன்றாக  விடவைக்கப்பட்டு  சொல்லுறுதி காத்தல் என மட்டுமே தன் தன்னறத்தை அவர் சுருக்கிகொண்டிருக்கிறார். அதன் காரணமாக அவர் தன்னை அஸ்தினாபுர அரியணை அமர்பவரின் ஆயுதம் என இருக்கிறார். அவர் வாழ்வதை நிறுத்தி நெடு நாட்காளாவதாக நாம் உணர்கிறோம்.   


   இப்படியான சிலர்   தன்னை மாய்த்துக்கொள்ள மதுவிற்குள் மூழ்க்கிகொள்ளுதலும் உண்டு.   மதுதரும் போதை இன்பத்திற்கு அடிமையாகி  இருப்பவர்களிடமிருந்து இவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.  தன் மனதிலிருந்து எழும் அறத்திகான  குரலிலிருந்து தன்னை தப்பித்துக்கொள்ள மதுவுக்குள் தலையைக் கவிழ்த்துக்கொள்பவர்கள் இவர்கள்.  எற்கெனவே வெண்முரசில் குண்டாசி இப்படி தன்னை மதுவிற்குள் மாய்த்துக்கொண்டதைக் கண்டிருக்கிறோம். இப்போது தன் தன்னறத்தை தவறவிட்ட  கர்ணன் மதுவுக்குள் மூழ்கி இருக்கும் சித்திரத்தை வெண்முரசு காட்டுகிறது. குண்டாசி தன்னைப்போலவே மதுவில் தன்னை மாய்த்துக்கொள்ள முயலும் கர்ணனைப் பார்கிறான்.  கர்ணன் அதிலிருந்து வெளிவரவேண்டும் என நினக்கும் தான் அல்லவா அந்தப் போதையிலிருந்து முதலில் விடுபடவேண்டும் என அவனுக்கு தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். அந்தக்கணம் முதல் அவன் மதுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான்.   மதுக்குடத்தில் தத்தளிக்கும் தேனீயைப்போல் இருக்கும் கர்ணனை அதிலிருந்து விடுவிக்க அவன்தன்  தன்னறத்தை கண்டுகொள்ளவேண்டும்.  ஆகவே அவன் தன்னறத்தை மீண்டும் கைக்கொள்ளவென  அவன் அகத்தினை தூண்ட  தாரையும் விகர்ணனும் முயல்கிறார்கள். குந்திக்கு நேர்ந்த அவமதிப்பை அவனுக்கு உணர்த்தி  அவன் தன்னறத்தை கண்விழிக்க வைக்கிறார்கள்.    கர்ணன் அந்தக் கணத்தில் தான் விழுந்து கிடக்கும்  மதுக்குடத்திலிருந்து சிறகடித்து வெளியேறுகிறான்.  


கர்ணன் குண்டாசியின் தோளை வளைத்து “என் அறைக்கு வருக, இளையோனே! மதுவருந்தாமல் பேசிக்கொண்டிருப்போம்” என்றான். குண்டாசி மேலாடையால் முகம் துடைத்து “ஆம்” என்றான்.

தண்டபாணி துரைவேல்