ஜெ
சுப்ரியையின் மனம்
செல்லும் திசைகளை கூர்மையாக பின்தொடர்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. குழப்பமான சிக்கலான
பாதை. எப்போதும் கர்ணன் அருகே அமரும்போது தன்னை குள்ளமாக உணர்ந்து எரிச்சல் அடைபவள்
அவள். ஆனால் இப்போது அவன் அருகே அப்படி சின்ன வடிவமாக அமர்வதில் ஆனந்தம் கொள்பவளாக
அவள் ஆகிவிட்டாள். அவனை நெருங்க விரும்புகிறாள். ஆனால் அவனை அணுகும்போது அவள் நாவில்
இருக்கும் பாம்புதான் பேசுகிறது. அது என்னைப்பார், என்னிடம் இன்னும் கூர்ந்துபார் என்ற
வீம்புதான். ஆனால் அந்தச்சொல் தான் வெளியே வருகிறது. அதுதான் அவளுடைய இயல்பாக இருக்கிறது.
அதை எவரும் எதுவும் செய்துவிடமுடியாது என அவளுக்கே தெரிந்திருக்கிறது
மகேஷ்