சபரி இறப்பதும்
சுப்ரியை மீண்டு எழுவதும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது. சபரி கனவில் ஒர் ஆழத்திற்குள்
இருக்கிறாள். அங்கே அவள் சுப்ரியையை அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அதேபோல நங்கூரம்
பற்றிய உவமை. நீருக்கு நிலையில்லை. திடமான வடிவமும் இல்லை. ஆனால் அதைப்பற்றிக்கொண்டு
பெரிய கப்பல்கள் நின்றுவிடுகின்றன. அதிலிருந்து விடுபடுவது மிகமிக எளியது. சற்றுத்திருப்பினாலே
போதும். அப்படி நங்கூரத்தை சுப்ரியை எடுத்துவிட்டிருக்கிறாள். அவள் விடுதலையை அடைந்துவிட்டாள்.
அதன்பின்னர்தான் அவள் கர்ணனைப் புதிய கண்களுடன் பார்க்க ஆரம்பிக்கிறாள் என நினைக்கிறேன்
மகாதேவன்