ஜெ
பானுமதியின் நடத்தை பற்றி இரு கடிதங்களை வாசித்தேன். ஒருவர் ஈவா
பிரவுன் பற்றி எழுதியிருந்தார். ஆனால் இந்த விஷயம் வெண்முரசில் பேசப்பட்டுள்ளது.
எப்படி ஒரு பெண் ஆணை துறக்கலாம் என்ற தமயந்தியின் கேள்விக்கு விடையாக
நீர்க்கோலத்திலே வருகிறது. இன்னின்ன காரணங்களுக்காகத் துறக்கலாம் என்கிறார்
அமைச்சர். அமைச்சராகச் சொன்னீர்கள் சரி, ஒரு பிராமணராகச் சொல்லுங்கள் என்று அவள்
கேட்கும்போது எந்நிலையிலும் துறக்காதவளே பத்தினி என்று அவர் சொல்கிறார். ஏனென்றால்
எந்த கடைநிலையில் இருப்பவர் ஆனாலும் அவனுக்கு கடைசிவரை துணை என ஒருவராவது
வேண்டும். துரியோதனனுக்கு பானுமதிதான். ஆகவேதான் அவள் பெரும்பத்தினி. ஆகவேதான்
அவள் கிருஷ்ணனுக்கு முன்னால் கண்ணீர் விடுகிறாள் என தோன்றுகிறது. அவனை திருத்த
முயல்கிறாள். ஆனால் அது முடியாது என்றும் அவன் அந்த உச்சநிலையை அடைந்துவிட்டான்
என்ரும் தெரிந்ததும் அவனிடம் முழுமையாக சரணடைந்துவிடுகிறாள். அதுவே பத்தினிகளின்
இயல்பு
ஜெ.
அன்புள்ள ஜெ,
அத்தனை பெண்களுக்கும்
அதற்கு முன்பு ஒரு பெண் முன்வடிவம் இருக்கும். அவர்கள் ஒரு தொடர்நிகழ்வு
ஜெ