இப்புவியில் காட்சிகளைவிட மிகுதி. இங்கு வாழ்வதற்கும் பெருகுவதற்கும் போரிடுவதற்கும் மட்டுமே காட்சிகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவற்றுக்கு அப்பால் சென்று அறியவேண்டியன அனைத்தும் காட்சிமயக்கங்களாகவே நம்மை சூழ்ந்துள்ளன—
காளி சொல்லும் இந்தவரிகளை நீர்க்கோலத்திலேயே வந்திருக்கலாம் என நான் நினைத்தேன்.
வெண்முரசின் அழகு இத்தகைய அழகான வரிகள். அல்லது தத்துவார்த்தமான
வரிகள். வெண்முரசு ஒரு காவியத்தின் உரைநடை வடிவம், ஏற்கனவே ஒருநண்பர் எழுதியதுபோல அதை
கவிதையாகவே வாசிக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக அதை வாசிப்பதற்கான மனநிலையை அளிப்பது இந்தமாதிரியான
அரிய வரிகள். இந்த வரியை வைத்துக்கொண்டு வெண்முரசையே புரிந்துகொள்ளமுடியும். ஒவ்வொரு
கதாபாத்திரமும் இன்னொன்றாக மருவும் இடங்களில்தான் நாம் அறியவேண்டிய அனைத்தும் உள்ளது.
அத்தனை கதாபாத்திரங்களும் எங்கேனும் உருகி உருமாறி மீண்டு வந்துகொண்டே இருக்கின்றன
என நினைக்கிறேன்
குமாரசாமி பெருமாள்