ஜெ
தனிமையில் இருக்கையில்
அவிரதனின் உள்ளம் வேதத்தில் சென்று படியும் சித்தரிப்பு அழகாக இருந்தது. கொந்தளிப்பும்
பின்பு மெல்ல படிந்து அமைவதும். பின்னர் சித்தம் உடலில் செயலாக ஆவதும் உள்ளம் வேதமாக
ஓடிக்கொண்டிருப்பதும். மௌனவிரதம் போன்ற யோகப்பயிற்சிகளைச் செய்த பழக்கமுள்ளவர்களால்
இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். ஒவ்வொரு படியாக அதை துல்லியமாகச்
சொல்லியிருக்கிறீர்கள். அவன் விடுபட முடியாமல் கொஞ்சம் கஷ்டப்படுவது அவனுடைய கடந்தகாலத்தைய
துன்பங்களும் நினைவுக்ளும்தான் என நினைக்கிறேன்
செல்வராஜ்