ஜெ
என்பிலனதை வெயில்போலக்
காயுமே
அன்பிலதனை அறம்
என்ற வள்ளுவர்
வரியைத்தான் குண்டாசி, கர்ணன் இருவரின் நிலையையும் எண்ணும்போதும் நினைத்துக்கொண்டேன்.
புழுப்போலத் துடிக்கிறார்கள். அறம்பிறழ்ந்தவர்களை அது துடிக்கவைக்கும். கர்ணன் இப்போது
துடிக்கிறான். குண்டாசி முன்னரே துடித்துவிட்டான். துரியோதனன் துடிக்கப்போகிறான்
குண்டாசிக்கும்
கர்ணனுக்கும் நிகழும் பழைய உரையாடல்களை பிரயாகை நாவலில் எடுத்துப்பார்த்தேன். ஆரம்பம்
முதலே அவர்களின் உறவின் இந்த நுட்பம் சொல்லப்பட்டிருக்கிறது, நாம்தான் கவனிக்கவில்லை
என நினைத்துக்கொண்டேன்
எம்.சந்தானகிருஷ்ணன்