அன்புள்ள ஜெ,
வெண்முரசின் ‘குருதிகொள் கரியோள்-2’ தொடரில், இளைய யாதவர் கௌரவர் சபைக்கு தூது சென்றுவெறும் கையுடன் திரும்பியதை சூதன் பாடுவதாக வந்த வரிகள் என்னை வேறொரு தளத்திற்கு கொண்டுசேர்த்தது. ‘வென்று சொல்லெழுவது மட்டுமல்ல, கீழ்மை முன் திரும்புவதும் பெரியோருக்குச் சிறப்பே’ எனும்வரிகள்….
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணல் காந்தியடிகளை, பிரிட்டிஷ் அரசின்ஊதுகுழலாக செயல்பட்ட இந்திய பிரதிநிதிகள் அவமானப்படுத்தினர். காந்தியடிகளின் எந்த கோரிக்கையும்ஏற்கப்படாமல், அவரை கீழ்மைப்படுத்தி அனுப்பினர். ‘வெறும் கையுடன் திரும்புகிறேன்’ என தன்வேதனையையும் – விரக்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.
அஸ்தினாபுரி அரண்மனையில் இளைய யாதவருக்கு ஏற்பட்ட அதே கையறுநிலை, அன்று காந்திக்கும்ஏற்பட்டதை ஒப்பிட முடியாமல் மேலேறி செல்லமுடியவில்லை
அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்.
திருவண்ணாமலை.