தன்னை அறியத் தொடங்கும் முதற்கணம் தான் எனும் ஆணவம் அழியத் தொடங்குகிறது. தானென்று இறுக்கி எழுப்பி நிறுத்தியிருப்பது பொய்யே என்றும் அவை ஒன்று பிறிதைக் குறிக்கும் வீண்சொற்களின் வெறும் குவையே என்றும் உணர்வதிலிருந்து அனைத்தும் தொடங்குகிறது. ஒவ்வொன்றையும் தொட்டு திறந்து செல்லும் ஒரு பயணம்.
– என்று சுப்ரியையிடம்
சொல்லும் சூக்ஷ்மை அதன்பின்னர் இயல்பாக “உங்கள் உடன்பிறந்தவரை சந்தித்தீர்களா, அரசி?” என்று கேட்கிறாள். இந்த இரண்டு வரிகளுக்கும் இடையே
உள்ள இடைவெளி, அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பது இன்றைக்கு அவள் தன் ச்கோதரியைச் சந்திக்கும்
இடத்தை வாசிக்கையில்தான் புரிந்தது.
வெண்முரசை நூலாக வாசித்தால் சட்டென்று அதற்குள்
சென்றுவிடுவோம். நாள்தோறும் வாசித்தால் அவ்வப்போது இந்த குறிப்புகள் ஞாபகம் வரவில்லை
என்றால் தவறிவிடுகிறது
ராஜசேகர்