அன்பு ஜெமோ சார்,
பன்னிரு படைக்களத்திற்கு பின் அங்கன் வரவேயில்லை. நீர்க்கோலத்தில் முக்தனின் பார்வையில் தோன்றி மறைந்தான்.
எப்பொழுது எவ்வாறு எழப் போகிறானென எண்ணிக் கொண்டேயிருக்கையில், அது குந்தியுடனான சந்திப்பில்தான் போலும்.
திருதாவைத் துரத்தும் மரணக் கனவுகள் குந்திக்கும் நேராமல் போகுமா? அங்கனால் நிகழவிருக்கும் பைமியின் மரணமும், பார்த்தனால் நிகழும் அங்கனின் மரணமும் குந்தியைக் கவலை கொள்ளச் செய்கிறதில்லையா? அவர்களை அதனால் பார்க்க விழைகிறாள்.
மாவேழம் ஏன் அவ்வாறு உரைத்தான் அங்கனுக்குத் தராத ஷத்ரிய அங்கீகாரம் பாண்டவருக்கும் இல்லாமல் போகட்டுமென்றா?
இரா.சிவமீனாட்சிசெல்லையா.