Monday, February 12, 2018

கர்ணனின் வருகை



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்கள் .

மஹாபாரதம் அதன் உச்சமான குருஷேத்திரத்தை நோக்கி செல்கிறது .இதில் பாண்டவர்கள் வனவாசமும் யாரும் அறியா வாசமும் முடித்து  மீண்டு விட்டார்கள் . போர் நிகழாமல்தங்களுக்குரிய நிலத்தை ,உரிமையை பெற பாண்டவர்கள் முயற்சி ஒரு பக்கமும் ,அதற்க்கு எதிர் திசையில் 
நிலமும்உரிமையையும்   மறுப்போனாக  கலிபுருஷனுக்கு   தன்னை  தாரைவார்த்துக்கொடுத்த  துரியோதனன்   மறுபக்கமும்  எனதங்களின்  பங்கை  ஆற்றுகிறார்கள்  இதில்  கிருஷ்ணர்  மேற்கொண்ட  முயற்சிகள்  யாவும் இன்றுவரைபலனையளிக்கவில்லை . ஆயினும்  இளைய  யாதவன்  தனது  பங்கை  இன்னும்  மிகைப்படுத்தத்தான்  முயல்வார் .  ஏனென்றால்  அனைவரும்  அறியும் உண்மை என்னவென்றால்  போர்  மூண்டாலும்  பாண்டவர்கள்  பீஷ்மராலும்துரோணராலும் மற்றும்  கிருபராலும் வீழ்வதும் நடக்காது .   அந்த மூவரால்   கொல்லப்பட மாட்டார்கள் .இதை துரியனும்அறிவான் . இதை  குந்தியும்  நன்கு அறிவாள்.ஆனால்  பாண்டவர்கள்  கர்ணனால்  வெல்லப்படுவது  நடக்கக்கூடும் .  பாண்டவர்களை  கொல்ல துரியோதனன்  நம்புவது   கர்ணனை மட்டுமே . ஆம் துரியோதனனின்  முதன்மை  அஸ்திரமேகர்ணன் தான்   பாண்டவர் தரப்பு சேனைகளை  நிர்மூலமாக்குவது  தான் பீஷ்மர் , துரோணர் போரில் ஆற்றும்  செயல்களாகஅமையும் .போரில்  பாண்டவர்களின்  உயிருக்கு  உத்திரவாதம்  ஒருவரால்  மட்டும்  வழங்க  முடியாது . ஆம் கர்ணனின்வில்திறம்  முன்பு அர்ச்சுனன்  மட்டுமே  நிற்கமுடியும் .அவனை வெல்லவும் கூடும் .ஆனால்  பிற பாண்டவர்கள் அதனைநினைத்து  பார்க்கமுடியாது . ஆம் இதனை பீமன் நன்கு  அறிவான்  வெண்முரசு  நூல்   ஐந்து – பிரயாகை –64

.”தந்தையேநீங்கள்யாரையாவது அஞ்சுகிறீர்களா?” என்றான் கடோத்கஜன்.  பீமன் அதிர்ந்து  திரும்பி நோக்கி சிலகணங்கள்  தயங்கிவிட்டு “ஆம்என்றான். “கர்ணன்   என்  கனவில் வந்துகொண்டே  இருக்கிறான்,  மைந்தா.  அவனை  நான்  அஞ்சுகிறேன்  என்பதை   எனக்குநானேகூட   ஒப்புக்கொள்வதில்லை  என்றான்.  மேலும் துரியோதனனை  கொல்வது என்பது கர்ணன்  உயிரோடு  இருக்கும்வரை   பீமனுக்கு சாத்தியப்படாது . ஆம் இனி மஹாபாரதத்தில்  கர்ணனின்  பிறப்பு  ரகசியத்தை  அவனிடம் போட்டு உடைக்கவேண்டும் . ஒரு வேளை  கர்ணன் தான் பாண்டவர்களின்  மூத்தவன் என அவன்  உணர்ந்தால்போர் ஓன்று நடக்காமலும்போகலாம்.  துரியோதனனின்   நட்பை விட தனது தம்பியர் பாண்டவர்கள்  பெரிது என கர்ணன் பாண்டவர்கள்  அணிமாறினாலே போதும் . யுத்தத்தை நிறுத்த ஒரு வழியும் பிறக்கலாம் .  இல்லையேல்  தருமனுக்கு  கொடுக்கமறுப்பதைகர்ணனுக்கு  கொடுக்க துரியோதனன் முன்வரலாம்  அல்லது  போர் ஓன்று  நிகழ்ந்தாலும்  பாண்டவர்களின்  உயிருக்குதீங்கில்லாத  இருப்புத்தன்மைக்கு உறுதியளித்த  பீஷ்மர்துரோணர் ,கிருபர்  வரிசையில் கர்ணனும் நிற்கலாம் . ஆம்  இதனைச்செய்து  முடிக்க   குந்தியால் மட்டுமே  முடியும் .ஆம் அதனை  அவள் இளைய  யாதவன் துணை  கொண்டு நடத்தலாம் .  அதன்துவக்கம் தான்  இன்றைய பகுதி - இன்றுவரை உங்கள்  இளைய மைந்தரை  எவரேனும் வெல்லக்கூடும் எனஎண்ணுகிறீர்களா?” என்று பலந்தரை கேட்டாள்குந்தி மறுமொழி  சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்.வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–

55 ஆம் கர்ணனை தனது  மூத்த மகன் என்று  அவனிடம் குந்தி  அறிவிக்க  வேண்டிய நேரம்வந்து விட்டது . அதனையும்   இளைய யாதவன் தான்  எடுத்து  செல்வான் . கடந்த  பதினான்கு வருடங்களாக   போதையின்உச்சத்தில்  குடியிலே  மயங்கி உழலும்  கர்ணனை மீட்கும் முயற்சியை  அவனை  பெற்ற  அன்னை  துவக்குவதாகவும்இதனை  கருதலாம் .  கர்ணன் பிறப்பால்  சத்திரியன் தான் சூதன் அல்ல  என்ற சொல்லே அவனுக்கு மீட்சி  என்பதைஉணர்ந்தவள் குந்தி .ஆம்  தாய்மையின் அடையாளம்  அது .நன்றி  ஜெயமோகன்  அவர்களே.


முனைவர் தி .செந்தில்