ஜெ
தன் அன்னையிடம் பேசும்போது பலந்தரை இப்படி வருந்துகிறாள் “அறியா ஊழ் சினந்து என்னை துரத்தி வருகிறது என்று எண்ணுகிறேன். ஒரு கணத்தில் என் வாழ்வின் அனைத்துப் பாதைகளும் மாறுபட்டன. இன்று நான் அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் இணையரசியென அமர்ந்திருக்கக்கூடும். அஸ்தினபுரி வென்று நிலம் கொண்டபின் அதன் வளர்ச்சிப்போக்கில் என்றோ ஒரு நாள் என் மைந்தர்களுக்கு அதில் பாதியை நான் கேட்டுப்பெற்றிருக்க முடியும். அவர்கள் தனிமுடி சூடி தங்கள் கொடிவழியினருக்கு புகழ் சேர்த்து அளித்திருக்கவும் கூடும். நாடிலிகளும் ஏதிலிகளுமாகிய இந்த இழிகூட்டத்தின் கையில் நான் சிக்கிக்கொண்டேன்” இது
அவள் அன்னைக்காகச் சொல்வதா இல்லை அவளே உண்மையில் உணர்வதா?
அதை ஆராயப்புகுந்தால் அன்னை அவளிடம் மங்கலநாண் துறந்து வரும்படிச் சொல்லும்போது
அவள் சொல்லும் பதிலில் ஒரு குறிப்பு இருக்கிறது ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உள்ளிருந்து ஒன்று அது இயல்வதல்ல என்று சொல்கிறது என்று பலந்தரை சொல்கிறாள். அந்த உள்ளிருந்து பேசும் ஒன்று என்ன
என்றுதான் அவள் கண்டுகொண்டிருக்கிறாள்.இளவரசி என்றும் அரசி என்றும் அணிந்த இந்த ஆடைகளுக்கும் அணிகளுக்கும்
அப்பால் அஞ்சியும் குழம்பியும் நின்றிருக்கும் எளிய பெண்தான் நான் என்று அவள் தன்னைப்பற்றிச்
சொல்கிறாள். அந்த உண்மையை உணர்கிறாள்
ராமச்சந்திரன்