Thursday, February 8, 2018

கறந்த கதை



ஜெ

துரியோதனன் சொல்லும்போது பிருத்வியை கறந்த கதை மேலும் கவித்துவமாக வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் என்னென்ன கறந்தார்கள் என்பது ஒரு கவிதை போல உள்ளது. அவன் ஏதோ நூலில் வாசித்ததைச் சொல்கிறான், பராசரரின் புராணமாலிகையின் கதை எனச் சொல்கிறான் என நினைக்கிறேன். மலைகள் அருவிகளையும் தேவர்கள் மழையையும் கறந்தனர். மக்கள் அன்னத்தைக் கறந்தனர். முனிவர் வேதத்தைக் கறந்தனர் என்னும் வரி அபாரமான ஒரு விரிவை அளித்தது. சோமனை கன்றாக்கி அதன் முன் நிறுத்தினர். அனலோன் அதன் நாவென எழுந்து நக்கி கனிய சந்தஸை கலமாக்கி நுரையெழ அமுதைக் கறந்தார் பிரகஸ்பதி. 


மகாதேவன்