ஆலயத்தின் வெளிச்சுற்று அறுபத்துநான்கு யோகினியரால் ஆனது. ஆனால் அங்கே பாரதவர்ஷத்தின் பெருநதிகளே யோகினியர் என அமர்ந்திருந்தனர். கருவறைக்கு ஒரு நீர்மகள் அன்னை வடிவில் அருள் காட்டி அமைந்திருந்தாள்.
சௌசாத் யோகினி ஆலயத்திற்கு நானும் சென்றிருந்தேன். ஏறத்தாழ இன்று அது இருக்கும் இடம்தான் அங்கநாடு. நீங்கள் அங்கே சென்றுவந்த செய்தியையும் வாசித்தேன். அழகான கோயில். அதை அற்புதமாக இந்தக்கதைக்குள் கொண்டுவந்துள்ளீர்கள்
ஆனால் யோகினியராக நதிகளை வைத்தது அருமையான கற்பனை. நதிகளை யோகினிகளாக வைத்த ஆலயம் அங்கே இருந்திருக்கலாம் என்றெ நினைக்கிறேன். சூரியனின் புத்திரிகள் என்றால் நதிகள்தானே?
எஸ்.பாலசுப்ரமணியன்