Thursday, February 15, 2018

குண்டாசி




அன்புள்ள ஜெ

குண்டாசியின் கதாபாத்திரவர்ணனை நுட்பமானது. குடிகாரர்களின் நடத்தையை நுட்பமாக காட்டுகிறது. கூடவே அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டு நம்மை தொந்தரவுபடுத்துகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்கள் நம் உலகில் நுழைவதற்காகவே பரிதாபமோ கோமாளித்தனமோ காட்டுகிறார்கள். குண்டாசியை ஆரம்பம் முதலே பார்த்துக்கொண்டு வந்த நமக்கு உருவாவது பெரிய துக்கம். க்யூட்டான சின்னப்பையனாக வந்து பீமனிடம் மூத்தவரே என்று அழைத்துக்கொண்டே இருப்பவன். பீமனைக்கொல்ல துரியன் சதிசெய்தபோது மனசாட்சி உறுத்தலால் குடிகாரன் ஆனவன். அவனுடைய அந்த வீழ்ச்சி ஒருவகையான ஆன்மீகமான தொந்தரவு. குடியால் தன்னை கோமாளியாக ஆக்கிக்கொள்கிறான். அழிந்துபோகிறான். வருந்தத்தக்க கதாபாத்திரம்


மகேஷ்