Friday, February 16, 2018

வஞ்சம்



ஜெ

கர்ணனின் குணச்சித்திரத்தில் ஒரு வன்மம் இருந்துகொண்டே இருக்கிறது. அவன் கொடைவள்ளல். நிமிர்வும் கம்பீரமும் கொண்டவன். ஆனால் அவமதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் அந்த வன்மம்தான் அவனுடைய முக்கியமான டிரைவிங் ஃபோர்ஸ் எனநினைக்கிறேன். நல்லியல்பு உண்டு. கருணை உண்டு. ஆனால் நஞ்சுதான் அடிப்படைக்குணம். அதிலிருந்துதான் மீண்டு எழுவதற்கான அந்த ஆற்றலைத் திரட்டிக்கொள்ளமுடியும் என நினைக்கிறேன். அவன் சுப்ரியைப்பார்த்து நீதான் ஷத்ரியப்பெண்ணாயிற்றே என்று சொல்லுமிடத்தில் எழும் அந்த வஞ்சச்சிரிப்புதான் உண்மையில் கர்ணனின் இயல்பு. கர்ணனின் இந்த முரண்பாடுகள் நிறைந்த கொந்தளிப்பான கதாபாத்திரத்தை வேண்முரசு விரித்துக்கொண்டே செல்கிறது


மனோகரன்