Sunday, February 11, 2018

தூதுசென்ற கால்கள்




அன்பு ஜே,
      
ஆழ்வாரின் பாசுரத்தை நினைவுறுத்தியது தங்கள் "குருதிச்சாரலின்" கண்ணின் தூது நிகழ்வின் போது.        

 நடந்த கால்கள் நொந்தவோ?நடுங்க ஞாலம் ஏனமாய*
இடந்தமெய்குலுங்கவோ?விலங்குமால்வரைச்சுரம்*
  
கடந்த கால்பரந்த காவிரிக்கரைக்குடந்தையுள்*
 
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழிகேசனே!
   
 என்று திருமழிசை யாழ்வார் ,தூது நடந்த கால்கள் நொந்து விட்டதா?மெய்குலுங்க வராகனாய் பூமியை இடந்ததால் களைப்புற்று ஆதிசேஷன் மேல் துயில்கின்றாயா!எழுந்திருந்து பேசு! என்ன, பெருமானும் பாதிஎழுந்த நிலை சேவையாகின்றது திருக்குடந்தை ஆராவமுதன் சந்நிதியில்.
     
 மண்ணாசையினால் எந்த அளவிற்கும் கீழே செல்ல தயாராகிறான் துரியன்.அதுவும் வேதத்தின் முதிர்ந்த முத்தான கண்ணனனிடமே பல பிராமணங்கள்,க்ஷத்ரியதர்மம் பற்றியும்.,நால்வகை வர்ணத்தவரின் கடன்களும்,எல்லாவற்றுக்கும் அவர் அத்தையான குந்தியின் பிள்ளை வரம் பற்றியும்.
       
அகங்கார மமகாரமற்று அரசநிலையையும் துறந்து பாண்டவர்க்காக தூது நிற்கும் நிலை ,அறமுனர்ந்தோர்களை நெகிழச்செய்கின்றதாகும்.
        
 மற்றோர் பாசுரம் எனை அதிகம் கவர்ந்த திருமங்கையாழ்வாரின் மொழியிலிருந்து,
     
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து*
 
அரக்கன் மன்னூர்தன்னை வாளியினால் முனிந்து*
  
அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகி பெருநிலத்தார் *
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே*.

    
என்கின்றார் ஆழ்வார் ,எவ்வுள் என்னும் திருவள்ளூரில் சயனிக்கும் பெருமானை.

     
இது சூதனின் பேச்சாக வெளிப்படுகிறது தங்களின் இச்சாரலில்.மூன்று முகம் தனக்குன்றென்று கூறி அடுத்த முகம்_வேதநாதனாக ,கீதமாக தங்களில் உருப்பெறப்போகிறான் பாண்டவத்தூதன்.

கலைவாணி செல்வி