ஜெ
விஷ்ணுபுரத்தில் இதுவரை வராத ஒரு பெண்கதாபாத்திரம்
பலந்தரையின் அன்னை. அவள் பெயர்கூட வரவில்லை. ஆனால் மகள்களின் மனதில் தீமையைச் செலுத்த
இடைவிடாது முயல்கிறாள். பலந்தரையின் உள்ளத்திலிருக்கும் எல்லா கசப்பும் அன்னையிடமிருந்து
வந்தது. அன்னையின் பிரச்சினை என்ன? நிமிர்வும் பெருந்தன்மையும் கொண்ட அவளுடைய நாத்தனார்தான்.
அவளுக்கு எதிராக இவள் இத்தனை கசப்பை ஈட்டிவைத்திருக்கிறாள். அஸ்தினபுரியையும் இந்திரப்பிரஸ்தத்தையும்
அழித்தாலும் தன் பேரன் ஒரு பெரிய அரசன் ஆகவேண்டும் என்கிறாள். அவளில் இருக்கும் அந்த
தீய இயல்பு அச்சுறுத்துகிறது. பலந்தரை கடைசியில் அவளிடமிருந்துதான் தப்பிக்கிறாள் என
எண்ணுகிறேன்
மகேஷ்